Home Events “மரபும் வரலாறும் ஒரு தேடல்” யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் நிகழ்ச்சி

“மரபும் வரலாறும் ஒரு தேடல்” யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் நிகழ்ச்சி

by Dr.Bama
0 comment

அனைவருக்கும் வணக்கம்.

மே 22, 2023 (திங்கட்கிழமை) மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்க மண்டபத்தில் உலக தமிழர் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் ஒழுங்கமைப்பில்,
“மரபும் வரலாறும் ஒரு தேடல்” என்ற தொனிப்பொருளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வினை வரலாற்றுத் துறையின் தலைவர் திருமதி சாந்தினி அருளானந்தம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புற நடாத்தினார். முதலில் செல்வி மோகனதாரணியின் இறைவணக்கத்துடன், இந்நிகழ்வின் வரவேற்புரையினை வரலாற்றுத் துறையின் விரிவுரையாளர் உசாந்தி மகாலிங்கம் அவர்கள் மேற்கொண்டார். அத்துடன் சிறப்புரைகளை ஓய்வு நிலை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

தொடர்ந்து, தமிழ் மரபு அறக்கட்டளையும் அதன் பணிகளும் என்ற ரீதியிலே முனைவர் மு.இறைவாணி அவர்களும், கடிகை அமைப்பும் அதன் பணிகளும் என்ற ரீதியில் முனைவர் மு.பாமா அவர்களும், மரபும் வரலாறும் ஒரு தேடல் என்ற ரீதியில் இவ்வமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷிணி அவர்களும், யாழ்ப்பாணத்திற்கான இவ்வமைப்பின் கிளை உருவாக்கம் தொடர்பாக வடமாகாண கலாசா உத்தியோகத்தர் அருள்சந்திரன் அவர்களும் சிறப்புரைகளை வழங்கினார்கள்.

இதன்போது தமிழர் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் செய்ய வேண்டியவை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக தமிழர் வரலாறு, பண்பாடு, அகழ்வுகள், மரபுப்பயணம், ஆய்வுகள் போன்றவற்றை ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி ஆசிய நாடுகளிலும் ஆவணப்படுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வருவது பற்றி கூறப்பட்டது. குறிப்பாக ஓலைச்சுவடிகளைச் சேகரித்தல், ஓலைச்சுவடிகளை மின்னாக்கப்படுத்தல், கல்வெட்டு வாசிப்புக்கள், ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடல், இணைய வழி கலந்துரையாடல்கள், தூரக்கிழக்காசிய நாடுகளில் ஆய்வு முயற்சிகள் போன்றவற்றையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் தொடர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இலங்கை – யாழ்ப்பாண கிளைக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள புதிய உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது. அந்த வகையில் கழகத்தின் ஆலோசகராக திருமதி சாந்தினி அருளானந்தம் நியமிக்கப்பட்டார். பொறுப்பாளராக திருமதி அனிதா சசிகரன் தெரிவுசெய்யப்பட்டார். தலைவராக செல்வி மோகனதாரணி தெரிவு செய்யப்பட்டார். துணைத்தலைவர்களாக S.பிரியங்கா, S.மதுசா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். செயலாளராக செல்வன் தி. சாரலன் அவர்களும் துணைச்செயலாளராக R.றேகாசினி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். பொருளாளராக லியானா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். குழு உறுப்பினர்களாக மாணவர்கள் இணைந்து கொண்டனர்.

ஆகவே தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இலங்கை – யாழ்ப்பாண கிளை மேற்கொள்ள வேண்டிய பணிகளாக தமிழர் மரபுகளை அடையாளப்படுத்தல், யாழ்ப்பாண வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பான ஆவணப்பதிவுகளை மேற்கொள்ளல், வலைப்பக்கங்களை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கன. அத்துடன் உலக தமிழ் மரபு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட நூல்களும் வரலாற்றுத் துறைக்கு அன்பளிப்புச்செய்யப்பட்டன.

இறுதியாக ஒழுங்கமைப்பாளரின் தொகுப்புரை இடம்பெற்று, தொடர்ந்து திருமதி அனிதா சசிகரன் அவர்களின் நன்றி உரையுடன் கலந்துரையாடல் இனிதே நிறைவேறியது.

“வரலாறு படிப்போம், வரலாறு படைப்போம் அதில்
நாமும் ஒருவராக இருப்போம்”

நன்றி வணக்கம்.

செயலாளர் செல்வன் தி. சாரலன்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இலங்கை – யாழ்ப்பாண கிளை

You may also like

Leave a Comment