கடிகை / Kadigai
“Kadigai” – THFi Virtual Academy of Excellence is an online training platform. ‘Kadigai’ offers you various online training opportunities to everyone seeking to learn Tamil Heritage, History and Archaeology. Almost all our programs are conducted online.
“கடிகை” – தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகத்தின் வழி தமிழ் மரபு, வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் உங்கள் கல்வியை விரிவாக்கிக் கொள்ளுங்கள்.

கடிகை
கடிகை - சொல்லின் பொருள்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அய்யனார்குளம் என்ற ஊரில் உள்ள மன்னார் கோயிலில் உள்ள குகைப்பகுதியில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது. ஐராவதம் மகாதேவன் அவர்களால் வாசிக்கப்பபட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் Early Tamil Epigraphy அறிக்கையில் இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இராசாப்பாறையில் இயற்கையாய் அமைந்த குகைத்தளத்தின் முகப்பு நெற்றிப்பகுதியில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு உள்ளே இரு கற்படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்கூரைப் பகுதியில் 3 வரிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

”பள்ளி செய்வித்தான் கடிகை (கோ) வின் மகன் பெருங்கூற்றன்“ என்பது கல்வெட்டு வாசகமாகும். கோ என்ற எழுத்து ஊகிக்கப்பட்டதாகும். கடிகை கோவின் மகன் பெருங்கூற்றன் என்பவன் பள்ளி செய்வித்தான் என்று பொருள்படும். நன்றி: தமிழகத் தொல்லியல் துறை -https://www.tagavalaatruppadai.in/

அனைவருக்கும் வணக்கம், தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மைநிலை இணையவழிப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம், 29 அக்டோபர் 2022 அன்று ஜூம் இணைய வழி நடைப்பெற்றது. பயிலரங்கத்தில் முனைவர் சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் முனைவர் சிவராமகிருஷ்ணன், உதவி பேராசியர், …
தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் பயிற்சிகளிலும் பயிலரங்கங்களிலும் பங்கு கொள்ளத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: [email protected]
Books
ராஜராஜனின் கொடை ஆனைமங்கலம் செப்பேடுகள் சோழப் பேரரசுக்கும் ஸ்ரீவிஜயப் பேரரசுக்குமான வணிகத் தொடர்புகள், நாகப்பட்டின சூளாமணி விகாரை மற்றும் கடாரப் படையெடுப்பு விலை: ₹180 ஆசிரியர்:க. சுபாஷினி பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல் மொழி: தமிழ் வெளியீடு: …