அனைவருக்கும் வணக்கம்,
தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை இணையவழிக் கல்விக்கழகம் கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி வீரமாமுனிவர் நினைவு நாளையொட்டி ஜூம் செயலி மூலம் இணைய வழியில் கருத்தரங்கை நடத்தியது.
வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் விதமாக மேலும் அது தொடர்பான ஆய்வுகளைத் தொடரும் விதமாக இந்த கருத்தரங்கு செயற்குழு உறுப்பினர்களால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றுனர்களில் ஒருவரான முனைவர் நா. கண்ணன் அவர்களின் வாழ்த்துரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்ததாக, தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷிணி ” திருக்குறள் மொழிபெயர்ப்பும் + சித்திரக்கதைகள்” என்ற தலைப்பில் பேசினார்கள்.
ஐரோப்பிய கத்தோலிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் ஆற்றிய சமயப்பணிக்கள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்துவரும் முனைவர் ஆனந்த் அமலதாஸ் “வீரமாமுனிவர் படைப்புகளில் வரலாற்றுத் தகவல்கள்” என்ற பொருண்மையில் சிறப்புரை ஆற்றினார். வீரமாமுனிவர் சிறந்த மருத்துவர் மற்றும் மருத்துவ முறைகள் என்னன்னா என்பதை அவருடைய படைப்புகளின் வாயிலாக முனைவர் ஆ. நிர்மலா “வீரமாமுனிவரின் தமிழ் மருத்துவ நூல்கள்- அமைப்பும் பாடுபொருளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாக வழங்கினார்.
பல்வேறு இடங்களிலிருந்து இந்த கருத்தரங்கத்தில் சுமார் 139 நபர்கள் பதிவுசெய்து கொண்டார்கள். இதில் கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வளர்கள் அடங்குவர். இவர்கள் ஆர்வமாகப் பங்கேற்று நிறையத் தகவல்கள் உள்வாங்கிக் கொண்டார்கள் மற்றும் நிறையக் கேள்விகளைக் கேட்டார்கள்..
பங்கேற்பாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடிகை செயற்குழு உறுப்பினர் மற்றும் வேலூர் ஆக்சில்லியம் கல்லூரி பேராசிரியர் முனைவர் இந்துமதி நிகழ்ச்சியைத் தொகுத்துத் திறம்பட வழங்கினார்.
கடிகை செயற்குழு உறுப்பினர் மற்றும் செய்யாறு அறிஞர் அண்ணா கல்லூரி பேராசிரியர் முனைவர் மதுரைவீரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முழு ஈடுப்பாட்டுடன் செய்து தந்தார்.
இவர்கள் இருவருக்கும் நன்றி..
நிகழ்ச்சிக்கான திட்டமிடல், ஏறப்பாடு என்று எல்லா நிலையிலும் எங்களை வழி நடத்திய தலைவர் முனைவர் சுபாஷிணி மற்றும் செயலாளர் முனைவர் தேமொழி அவர்களுக்கும் நன்றி.
நன்றி
பாமா
கடிகைப் பொறுப்பாளர்