இராஜேந்திர சோழனின் ஒட்ரநாடு வெற்றி
நூலாசிரியர்: முனைவர்.ஜே .ஆர் சிவராமகிருஷ்ணன்
நூல் குறிப்பு:
மாமன்னன் இராஜேந்திரன் மேற்கொண்ட வடபுல படையெடுப்பை வெறும் கங்கை நீரினை கொண்டுவருவதற்கான ஆன்மிகப் படையெடுப்பிற்குள் புகுத்திப் பார்க்கிறார்கள் சில வரலாற்று அறிஞர்கள். இக்கருத்துருவாக்கத்தைச் சிதைக்கும் முயற்சியே இந்நூலின் முக்கியமான நோக்கமாகும். நேரடிக் களஆய்வு, தர்க்கமுறை விசாரணைகள், கூறப்பட்ட சான்றுகளை மீளாய்விற்கு உட்படுத்துதல் போன்றவற்றின் வழியாக இராஜேந்திர சோழன் ஒட்ர நாட்டின் (இன்றைய ஒடிஷா) மகேந்திரகிரி கடந்து தென் கோசலம் வரை சென்றுள்ளதையும், இது கடலாதிக்கத்திற்கானப் போரே ஒழிய புனிதப் படையெடுப்பன்று என்பதை சான்றுகளின்படி இந்நூலில் விவாதிக்கப்படுகிறது. சீனா மற்று ஸ்ரீவிஜய அரசுகள் சோழப் பேரரசின் ஏரியாக விளங்கிய வங்கக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதை இராஜேந்திரன் விரும்பவில்லை. மேலும் இராஜாங்கரீதியாக சீனாவும், ஸ்ரீவிஜயமும் சோழ அரசுடன் வலுவான நட்புறவைக் கொண்டிருந்தன. ஆனால் இவ்விருநாடுகளும் வங்கக்கடல், இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்த இராஜேந்திரன் கையாண்ட இராஜத்தந்திர யுக்தியே கங்கைப் படையெடுப்பாகும். புதிய தலைநகரை கங்கை நீரால் புனிதமாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தாம் கங்கைப் படையெடுப்பை மேற்கோள்வதாகக் கூறிவிட்டு அதை வல்லடிப்போராகவே மேற்கொண்டான் என்பதே உண்மை என்பதை விளக்கும் நூல் இது.
விலை ரூ.90/-
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பக நூல்கள் அனைத்தும்
நேரில் வாங்க:
- டிஸ்கவரி புக் பாலாஸ், சென்னை
- ஆழி பதிப்பகம், சென்னை
- எம்ரால்ட் பதிப்பகம், சென்னை
இணையம் மூலம் வாங்க:
- https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
- https://wisdomkart.in/books-publication/tamil-heritage-foundation/
வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஒரு bundle-யாக வாங்க விரும்பினால் கூடுதலாக courier கட்டணம் ரூபாய் 3000 வரை அதிகமாகும்.