தமிழகத்தில் பௌத்தம்:
நூலாசிரியர்: முனைவர் தேமொழி
நூல் குறிப்பு:
முதலில் தேரவாத புத்த சமயத்தில் சிற்பங்களில் குறியீடாகக் காட்டப்பட்ட புத்தருக்குத் திருவுருவம் கொடுக்கப்பட்டது. கனிஷ்கரின் காலத்தில் மகாயான பெளத்தப்பிரிவு தோன்றிய பொழுதே என்பதைப் புத்தரின் திருவுருவத் தோற்றம் அத்தியாயம் விவரிக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதியில் பொஆ மு.5ஆம் நூற்றாண்டு வாக்கிலிருந்து பௌத்த சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியவர்களும் பின்னர் புத்தரின் உருவச் சிலைகளை வடித்து வழிபடத் தொடங்கினர் என்பதற்குத் தமிழகத்தின் பலபகுதிகளிலும் கிடைக்கும் புத்தர் சிலைகள் சான்றுகளாக இன்றும் கிடைத்து வருகின்றன.
தமிழ் இலக்கியங்களிலும் பௌத்த சுவடுகள் காணப்படுகின்றன. பௌத்த சிற்பங்களின் அடிப்படையில் கலித்தொகையில் கூறப்படும் ‘முக்கோற்பகவர்” யார் என்பதையும் அந்தணர் என்பவர் யார் என்பதையும் இலக்கிய மீள்பார்வை மூலம் அறிய முடிகிறது.
பொ.ஆ. 5ஆம் நூற்றாண்டு களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டு காவிரிப்பூம்பட்டினம், புத்தமங்கலம் போன்ற ஊர்களின் குறிப்புகளை ஆசாரிய புத்ததத்த மகாதேரர் தன் நூலில் குறிப்பிடுகிறார். மேலும், திருக்குறளில் கடவுள் வாழ்த்து அத்தியாயம் கூறும் அறவாழி அந்தணனின் எண்குணங்கள் யாவை அவற்றுக்கான பௌத்த பின்புல விளக்கம் என்ன என்பதையும் பௌத்த பின்னணியிலிருந்து புரிந்து கொள்ள இயலும் என்பதை இந்த நூலின் வாயிலாக அறிய முடியும்.
விலை ரூ.120.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பக நூல்கள் அனைத்தும்
நேரில் வாங்க:
- டிஸ்கவரி புக் பாலாஸ், சென்னை
- ஆழி பதிப்பகம், சென்னை
- எம்ரால்ட் பதிப்பகம், சென்னை
இணையம் மூலம் வாங்க:
- https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
- https://wisdomkart.in/books-publication/tamil-heritage-foundation/
வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஒரு bundle-யாக வாங்க விரும்பினால் கூடுதலாக courier கட்டணம் ரூபாய் 3000 வரை அதிகமாகும்.