அனைவருக்கும் வணக்கம்!
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 18ம் தேதி மாலை இணைய வழியாக நடத்திய தமிழ் கல்வெட்டு பயிற்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இப்பயிற்சி குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும் தமிழர்களுக்காக நடைபெற்றது. முதலில் தமிழி எழுத்துக்களை எழுதவும் வாசிக்கவும் பயிற்றுவிக்கப்பட்டது.
பின்னர் குந்தவை நாச்சியார் கல்லூரி இணை பேராசிரியர் முனைவர்.சிவராமகிருஷ்ணன் பல்வேறு கல்வெட்டுகளை பற்றி விளக்கம் அளித்தார். இப்பயிலரங்கத்தில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மின் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழி கல்வெட்டு பயிற்சி பயிலரங்கத்தை திறம்பட நடத்திய டாக்டர்.பாமா தலைமையிலான குழுவினருக்கும் குறிப்பாக திரு.மணிவண்ணன், திரு.நாணா ஆகியோருக்கும், என்னோடு இணைந்து இப்பயிற்சியை சிறப்பாக அளித்த இணை பேராசிரியர் முனைவர்.சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று பயன் பெற்ற அனைவருக்கும் எங்களது நல்வாழ்த்துகள்.
வரலாற்றை முறையாக அறிந்தகொள்வதற்கு, நூல்களை வாசிக்கவும், கல்வெட்டு பயிற்சிகளையும் மரபு பயணங்களையும் மேற்கொள்ளவும்.
நன்றி,
க.சுபாஷினி,
நிறுவனர், தமிழ் மரபு அறக்கட்டளை.