Home Uncategorized கடிகை

கடிகை

by admin
0 comment

Master Tamil Heritage essentials with “Kadigai” – THFi Virtual Academy of Excellence ” online training program.

“கடிகை” – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகத்தின் வழி தமிழ் வரலாற்றுத் துறையில் உங்கள் கல்வியை விரிவாக்கிக் கொள்ளுங்கள்.

“கடிகை” – என்ற தமிழ்ச்சொல்லின் கல்வெட்டுச் சான்று

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அய்யனார்குளம் என்ற ஊரில் உள்ள மன்னார் கோயிலில் உள்ள குகைப்பகுதியில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

ஐராவதம் மகாதேவன் அவர்களால் வாசிக்கப்பபட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் Early Tamil Epigraphy அறிக்கையில் இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இராசாப்பாறையில் இயற்கையாய் அமைந்த குகைத்தளத்தின் முகப்பு நெற்றிப்பகுதியில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு உள்ளே இரு கற்படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்கூரைப் பகுதியில் 3 வரிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. ”பள்ளி செய்வித்தான் கடிகை (கோ) வின் மகன் பெருங்கூற்றன்“ என்பது கல்வெட்டு வாசகமாகும். கோ என்ற எழுத்து ஊகிக்கப்பட்டதாகும். கடிகை கோவின் மகன் பெருங்கூற்றன் என்பவன் பள்ளி செய்வித்தான் என்று பொருள்படும்.

நன்றி: தமிழகத் தொல்லியல் துறை -https://www.tagavalaatruppadai.in/

You may also like

Leave a Comment